தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு பெரிதான கதாபாத்திரங்கள் பார்ப்பது அரிது. இன்று அந்த நிலை மாறினாலும் அன்றைய கால தமிழ் சினிமாவிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சரிதா. ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்தவர். சிவாஜி கணேசன். ரஜினி காந்த் , கமல் ஹாசன், சிவகுமார், தியாகராஜன், ஜெய் சங்கர் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை சொந்தமாக்கியவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றார். தமிழில் ‘தப்பு தாளங்கள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சரிதா. இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்தில் மிகப்பெரிய அளவு பேசப்பட்டார். பின் தொடர்ந்து தமிழில் ‘வண்டி சக்கரம்’, ‘நெற்றிக்கண்’, ‘கீழ் வானம் சிவக்கும்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘புது கவிதை’, ‘அக்னி சாட்சி’, ‘மலையூர் மம்பட்டியான்’, ‘உயிருள்ள வரை உஷா’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா.

140 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அதே நேரத்தில் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் தென்னிந்தியாவில் வலம் வந்தார் நடிகை சரிதா. பிரபல நடிகைகளான சுஹாசினி, பானு பிரியா, ராதா, நதியா, அமலா, ஷோபனா நக்மா, மீனா, ரம்யா கிருஷ்ணா, ரோஜா, சிம்ரன், சினேகா, குஷ்பூ ஆகியோருக்கு பிற மொழி படங்களுக்கு டப் செய்து கவனம் பெற்றார். அதன்படி சிறந்த பின்னணி குரலுக்காக நந்தி விருதினை நான்கு முறை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரிதா சமீபத்தில் பல படங்களில் குணச்சித்திரம் கதாபாத்திரங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கி வரும் மாவீரன் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சரிதா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்களால் அந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.