2012-ல் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.ஹீரோயின் ஆவதற்கு முன் 2010-ல் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.தமிழின் முதல் சூப்பர்ஹீரோ படமாக முகமூடி உருவானது.முகமூடி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் பூஜாவிற்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்தன.

இதனையடுத்து தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் நடிக்கத்தொடங்கினார் பூஜா.ஹ்ரித்திக் ரோஷனின் மொஹஞ்சதாரோ படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் , பல ரசிகர்களை பெற்றார்.தெலுங்கில் இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்க ராசியான நடிகையாக மாறினார்.ஜூனியர் NTR,அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு என்று வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார்.

இவர் ஹீரோயினாக நடித்த Alavaikunthapuramuloo,ராதே ஷியாம்,பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் வெளியாகி செம ஹிட் அடித்திருந்தன.இதனை அடுத்து SSMB 28,சல்மான் கான் ஹிந்தி படம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் பூஜா தனது புகைப்படங்கள் வீடியோக்கள் பட அப்டேட்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

தற்போது தனக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.இவர் விரைவில் குணமடைந்து பழைய நிலைமைக்கு திரும்ப ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.