வரும் ஆகஸ்ட் மாதம் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தமன்னா, மோகன் லால், ஜாக்கி ஷராப், சிவராஜ் குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு போன்ற நட்சத்திர பட்டாளத்துடன் உருவான ஜெயிலர் படத்தின் ஆவல் நாளுக்கு நாள் அதிகரிக்க இப்படம் வெளியாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர்.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் ஜெயிலர் பட பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை மிர்னா அவர்கள் பகிர்ந்து கொண்டார். அதில் இசை வெளியீட்டு விழாவில் “நீலாம்பரி முன்னாடி என் மானமே போச்சு..” என்று நெல்சன் இயக்கம் குறித்து ரஜினிகாந்த் வேடிக்கையாக பேசியது குறித்து கேட்கையில்,

அந்த காட்சி ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் ரியாக்ஷன் வேண்டும். நெல்சன் சாருக்கு என்ன வேணுமோ அதை தனிதனிதனியா கேட்டு எடுத்துடுவார். அந்த ரியாக்ஷன் சின்னதா கூடுதலா வந்தாலும் திருப்பி திருப்பி எடுப்பார். அன்னிக்கு அப்படிதான் 9,10 டேக் ஆச்சு.. அது ரொம்ப சின்ன ஷாட் தான். ஆனா அது நெல்சனுக்கு தேவையானது வர வரைக்கும் அவர் எடுத்துட்டு இருந்தார். நானும் ரம்யா கிருஷ்ணன் மேமும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துட்டு இருந்தோம்.” என்றார் நடிகை மிர்னா.

அதை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் கதாபாத்திரம் வடிவமைப்பு குறித்து கேட்கையில், ஜெயிலர் படத்துல ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. எனக்கு தெரிஞ்சு ஒவ்வொருத்தரோட குணாதிசயம் பார்த்து வேலை செய்றாரு. அவரே தனியா கதாபாத்திரம் எடுத்து அதுல நம்மள திணிக்காம. நம்ம கிட்ட என்ன இருக்கோ அதை வெளி கொண்டு வந்து அவருக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்குறாரு.. அது ரொம்ப ஆர்வமா இருந்தது.. என்றார் நடிகை மிர்னா.

மேலும் தொடர்ந்து நடிகை மிர்னா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்த தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..