தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அமிர்தா ஐயர், பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்த படைவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தென்றல் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார் அமிர்தா.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வரும் அமிர்தா தமிழில் ஜீவி பிரகாஷின் வணக்கம் டா மாப்ளேய், பிக் பாஸ் கவின் நடித்த லிப்ட் படங்களிலும், அருண் விஜய்யின் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக வெளிவந்த ரெட், அர்ஜுனா பல்குனா உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா & ஜெய் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அமிர்தா ஐயர் தெலுங்கில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக வெளிவர இருக்கும் ஹனு மேன் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் கன்னடத்தில் அமிர்தா ஐயர் நடித்துள்ள க்ரமயனா திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமிர்தாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை அமிர்தா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆமாம் எனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. சரியாகிவிடும் என நினைக்கிறேன். விரைவில் திரும்ப வருகிறேன்” தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக பல திரை பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸடாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள அக்கவுண்ட்டுகள் ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில் நடிகை அமிர்தாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Yes ! my Instagram has been Hacked 😞 hope it gets recovered 🙏🏻 Will come back soon .

— Amritha (@Actor_Amritha) February 1, 2022