நம்ம வாழ்க்கைல நமக்கு நல்லது கேட்டது சொல்லி தந்து நம்ம வாழ்க்கையை மெறுகேத்துறதுல முக்கிய பங்கு அப்பா அம்மாவை தாண்டி , நம்ம டீச்சர்ஸ் மட்டும் தான்.அதுனால தான் மாதா,பிதா,குரு,தெய்வம்ன்னு சொல்லுவாங்க. ஸ்ட்ரிக்ட் ஆன ஜாலியான இப்படி பல விதமான ஆசிரியர்கள் நம்ம வாழக்கைல வந்துட்டு போவாங்க.அவங்க சொல்லி தர பாடங்கள் நம்ம வாழ்க்கையில ரொம்ப உதவியா இருந்து பலரும் பல உயரங்களை தொட உறுதுணையா இருந்துருக்கு.

பலருக்கும் Inspiration-ஆ இருந்து பலரையும் வெற்றி பெற வெச்சு , அவங்க நம்ம பசங்கன்னு கம்பீரமா சொல்ற வாத்தியார்கள் எப்பவுமே கிரேட் தான்.அவங்கள கௌரவப்படுத்தத்தான் தான் வருஷா வருஷம் டீச்சர்ஸ் டே-ன்னு ஒன்னு கொண்டாடுறோம்

அப்படி பல வாத்தியார்கள் நம்ம சினிமாலயும் இருந்துருக்காங்க.MGR,ரஜினி ஆரம்பிச்சு இன்னைக்கு இருக்குற விஜய் வரைக்கும் பல சூப்பரான வாத்தியார்கள் நம்ம சினிமாவுல வந்துருக்காங்க.நல்ல கருத்துகள் சொல்லி, ரசிகர்கள் மனசுல நீங்கா இடம் பிடிச்சு, நிஜ வாழ்க்கையில இருக்க டீச்சர்களை நினைவு படுத்துற மாதிரி நம்ம சினிமாவுல இருக்குற வாத்தியார்கள் யார் யாருன்னு பார்க்கலாம் வாங்க.

தர்மத்தின் தலைவன் - ரஜினி - பாலசுப்ரமணியம்

மறதி நோய் உள்ள வாத்தியார் பாலு மற்றும் ரௌடி ஷங்கர் என இரு வேடங்களில் நடிச்சு அசத்தியிருப்பார் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.வன்முறை கூடாது,மத்த மனுஷங்களை மதிக்கணும்ன்னு ரஜினி பேசுற வசனங்கள் இன்னமும் இருக்குற தலைமுறைக்கு பொருந்தி போறது இந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் எப்பவும் நினைவு கூறும் படியா அமையுது

நம்மவர் - கமல் - வி சி செல்வம் - VC

மாடர்ன் இளைஞர்கள் , போதை பொருள் பயன்படுத்துறது போன்ற செயல்கள்ல ஈடுபட்டு தவறான பாதையில போக அந்த காலேஜூக்கு வர்ற வி சி செல்வம் அவங்களை நல்வழி படுத்தி திருத்துற காட்சிகள் ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பை பெற்றிருக்கும்.ரிலீஸ் ஆன காலகட்டத்தில் கமல் பேசுன வசனங்கள் இன்னைக்கும் ஒத்துப்போறது இந்த கதாபாத்திரத்தை காலத்துக்கும் அழியாமல் வெச்சுருக்கு.ஸ்டுடென்ட்ஸ் கூட சேர்ந்து காலேஜை கமல் சுத்தம் செஞ்சுட்டே பாடுற அந்த சொர்கம் என்பது நமக்கு பாட்டு இணைக்கும் பலருக்கும் Favourite-ஆ இருக்குறது பாக்க முடியும்

மாஸ்டர் - விஜய் - ஜான் துரைராஜ் - JD

குடிகார வாத்தியார் குடியால் மற்றவர்களுக்கு ஏற்படுற பிரச்சனை , அதிலிருந்து மீண்டு போதையில் சிக்கும் தவிக்கும் மாணவர்களை மாத்துறதுன்னு ஒரு வாத்தியாராக பசங்களை எப்படி வழிநடத்தணும்னு விஜய் அழகா நதிச்சுருப்பாரு.காலேஜ்ல வர சீனா இருந்தாலும் சரி,சீர்திருத்த பள்ளில வர சீனா இருந்தாலும் சரி தன்னோட ஜாலியான நடிப்பால் கலைக்கியிருப்பாரு விஜய்.பசங்களுக்கு நல்வழியை சொல்லித்தரது அதுவும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரியே சொல்லித்தந்த இந்த JD ரசிகர்களின் One of the Favourite Professor

ரமணா - விஜயகாந்த் - ரமணா

காலேஜ் வாத்தியாராக நிம்மதியாக வாழ்க்கை நடத்தி வரும் ரமணா சந்திக்கும் ஒரு பிரச்னையால் அவரது குடும்பமே இறந்து போக , லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ஒழித்து ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க தனது மாணவர்கள் மூலம் ஒரு புரட்சியை செய்கிறார்.இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் எதிர்க்கும் புரட்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

வாகை சூடவா - விமல் - வேலுத்தம்பி

80'ஸ் காலகட்டத்தில் நடக்கும் படிப்பு என்றால் என்ன தெரியாத ஊருக்கு வரும் ஒரு புது வாத்தியார் அந்த பசங்களுக்கு எப்படி படிப்பில் ஆர்வம் வரவைத்தார் என்பதை ரொம்ப அழகா சொன்ன படம்.விமல் தன்னோட எதார்த்தமான நடிப்பால எல்லாரையும் கவர்ந்திருப்பாரு.பல விருதுகளை இந்த படம் அள்ளுச்சு.

சாட்டை - சமுத்திரக்கனி - தயாளன்

Government School டீச்சர்னாலே வேலை பார்க்க மாட்டாங்க , ஒழுங்கா சொல்லி தர மாட்டங்கன்னு இருந்த பலரோட எண்ணத்தை தவிடுபுடியாக்கிய படம்.டீச்சர்னா ஸ்ட்ரிக்ட்டா தான் இருக்கணும்னு இல்லன்னு பல பேருக்கு உணர்த்துன படம்.இன்னைக்கும் யாருக்காவது அட்வைஸ் பண்ணா இவர் பெரிய சாட்டை சமுத்திரக்கனின்னு பலரும் சொல்லுவாங்க ,அப்படி அந்த கதாபாத்திரம் எல்லார் மனசுலயும் போய் சேர்ந்திருக்கும்.

நண்பன் - சத்யராஜ் - விருமாண்டி சந்தனம் - வைரஸ்

விஜய் நடிச்ச நண்பன் படத்துல ஸ்ட்ரிக்ட்டான ப்ரின்ஸிபலா வந்து அப்பறம் ஸ்டூடெண்ட்ஸ் கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு அவங்களோட நல்லதுக்காக மாறும் ஒரு நல்ல மனிதரா,சத்யராஜோட வைரஸ் கதாபாத்திரம் மக்கள் மனசுல ஒரு தனி இடம் பிடிச்சுருக்கு

ராட்சசி - ஜோதிகா - கீதா ராணி

அரசு பள்ளியில Headmaster-ஆ சேர்ந்து குழந்தைங்களுக்கு நல்லது பண்ணி அங்க நடக்குற அநியாயங்களை தட்டிக்கேட்டு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கணும்னு கீதா ராணி கதாபாத்திரத்துல எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பட்டையை கிளப்பிருப்பாங்க நம்ம ஜோதிகா

சினேகா - ஹரிதாஸ் - அமுதவல்லி

ஆட்டிசம் பிரச்சனை இருக்க ஒரு பையன் கிட்டயும் திறமை இருக்கும்னு கண்டுபிடிச்சு அவனுக்கு சப்போர்ட் பண்ணி அவனை வெற்றி பெற வைக்குற டீச்சரா அசத்தி சினேகா தனக்குன்னு ஒரு தனி இடத்தை பிடிச்சுருக்காங்க.அவரோட கதாபாத்திரத்தம் இன்றும் பலரும் Favourite-ஆ இருக்குது

ப்ரேமம் - சாய் பல்லவி - மலர் டீச்சர்

இது பசங்க நிறைய Relate பண்ணிகிட்ட ஒரு கதாபாத்திரம்.காலேஜ் டைம்ல ரொம்ப அழகா ஒரு டீச்சர் இருப்பாங்க அவங்கள எல்லாருமே சைட் அடிச்சுருப்போம்,அந்த மாதிரி ஒரு டீச்சர் இருந்து அவங்களும் நம்மகிட்ட Friendly-ஆ இருந்து நம்மள பல பிரச்சனைல இருந்து காப்பாத்தி விடுவாங்க.அப்படி பட்ட ஒரு கதாபாத்திரம் தான் மலர் டீச்சர் அந்த கதாபாத்திரத்துல நடிச்சு பல பேரோட Crush-ஆ மாறுனவங்க தான் சாய் பல்லவி.

இதுவரை நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சில வாத்தியார்கள் தான் இவங்க அடுத்ததா வரபோற படங்கள்ல நமக்கு புதுசா பாடம் சொல்லி கொடுத்து யாரெல்லாம் நமக்கு பிடிச்ச டீச்சரா மாறுறாங்கன்னு பொறுத்திருந்து பாப்போம்.