ஆகச்சிறந்த இயக்குனராக தனது ஒவ்வொரு படைப்புகளையும் வழங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர தயாராகி உள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்கும், விடுதலை திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் விடுதலை பாகம் 1 திரைப்படம் வரும் மார்ச் 29ம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த தரமான படைப்பாக வெளிவந்திருக்கும் இந்த விடுதலை பாகம் 1 படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இதுவரை நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி வேறு ஒரு ஆளாக மாறி சிறந்த நடிகராக தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் சூரி, பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “2020இல் விடுதலை என்ற படத்தை துவங்குகிறீர்கள் 2023 முதல் பாகத்தை முடித்திருக்கிறீர்கள். இந்த இடைவெளியில் சூரி என்கிற நடிகர் சூரி என்கிற மனிதர் இவர்கள் இருவருக்கும் என்னென்ன மாற்றங்கள் நடந்தன?" என கேட்ட போது,

“குமரேசனாக இந்த விடுதலை திரைப்படத்திற்குள் வந்ததற்கு அப்புறம் அடுத்தடுத்து என்னுடைய பார்வைகள், சினிமா பார்க்கும் விதங்கள் கதாபாத்திரமாக எப்படி எல்லாம் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும், எப்படி எல்லாம் மென்மேலும் முயற்சிக்கலாம். ஒருவேளை இந்த குமரேசன் மக்கள் மத்தியில் வந்ததற்கு அப்புறம்… அந்த வகையில் கதை நாயகனாக அல்லது கதை சார்ந்து ஒரு கதாபாத்திரமாக என்னை எப்படி தயார் படுத்தலாம் என்பது போன்று... அதற்கு முன்பு இருந்த ஒரு சூரி இல்லாமல் வேறு ஒரு பார்வை எனக்கு தெரிகிறது. என பதில் அளித்த சூரி அவர்களிடம், “தனிப்பட்ட முறையில் மனிதனாக ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா? இந்த படத்தின் அரசியல் மற்றும் பிற விஷயங்கள் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா? என கேட்டபோது, “அந்த மாதிரியான எந்த மாற்றங்களும் நிகழவில்லை” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சூரி அவர்கள், “விடுதலை படத்தில் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இப்படி ஒரு நடிகன் இருக்கிறான் என எனக்கு அறிமுகப்படுத்திய பிறகு மற்றவர்களுக்கு எல்லாம் அதை அறிமுகப்படுத்தியதற்கு பிறகு எனக்கு புதிய நம்பிக்கை வந்து விட்டது. இவனை யார் எப்படி பயன்படுத்த வேண்டும் என நினைத்தாலும் அப்படியாக கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது எனக்கு..” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சூரியின் அந்த முழு பேட்டி இதோ…