தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை. தமிழ் நெஞ்சங்கள் மறக்கமுடியாத மனிதர் விவேக். நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து கொடுத்தது மட்டுமல்லாமல் அவரது திரைப்பயணத்தில் சமூக அக்கறையை சரிவர செய்து சமூதாயத்தில் தன்னிகரற்ற மனிதராகவும் வலம் வந்தவர் விவேக். தன் தனித்துவமான நகைச்சுவையின் மூலம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த விவேக் ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடிக்க வைத்த தினம் 2021 ஏப்ரல் 17. லட்சக்கணக்கான ரசிகர்களின் பிடித்த திரைபிரபலமாய் இருந்த விவேக் உடல்நல குறைவினால் மறைந்ததையடுத்து தமிழ் சினிமா நீங்க முடியா துயரத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் ஆரம்பகாலத்திலிருந்து நெருங்கிய நண்பராய் இருந்து வரும் நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா அவர்களிடம் விவேக் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கேட்கையில் அவர்,

“விவேக் எனக்கு சினிமாவிற்கு வரதுக்கு முன்னாடியே எனக்கு நெருங்கிய நண்பர் அவர். Humour Club னு ஒண்ணு இருந்தது. அதுல நாங்க இருந்தோம். இரண்டாவது வாரம் ஞாயிற்று கிழமை அங்கு சென்று நமக்கு தெரிந்த ஜோக் சொல்லாம். இங்கு நல்லா திறமையானவரை பாலசந்திரடம் அறிமுகப்படுத்துவார் கோவிந்தராஜ். அதன்படி தான் சார்லி போனார். அப்புறம் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற படத்தில் அறிமுகமானார் விவேக்.

விவேக் திரையில் அழும் போதெல்லாம் சிரிப்பு வருது. ரொம்ப நல்லா பன்றாருனு நிறைய பேர் சொன்னார்கள். என் படம் திரையில் வராத போது அவர் அழைத்து 'ஆரத்தி எடுங்கடி' படத்தில் வசனம் எழுத வாய்ப்பு கொடுத்தார். அப்போ அந்த படத்தில் விவேக் அவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தேன். அந்த படத்தில் விவேக் நிறைய ஸ்கோர் பண்ணிருப்பார். வித்யாசமான காமெடியை கொடுத்திருப்பார்.

அப்பறம் பாலசந்தர் சார் படம் பார்த்துட்டு சொன்னார் விவேக்கிடம் 'நான் உன்ன A center க்கு கொண்டு போனேன்.‌ ரமேஷ் உன்ன B & C க்கு கூப்டு வந்துட்டார்' னு சொன்னார். அதுக்கப்புறம் நானும் விவேக் இரண்டு பேரும் சேர்ந்து 'டாப் டக்கர்' னு ஒரு சீரியல் பண்ணோம் சன் டீவியில்.. பெரிய பிரபலமானது. அதிலிருந்து நாங்க ரொம்ப நெருங்கிய நண்பரா இருந்தோம்." என்றார் ரமேஷ் கண்ணா

மேலும் இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா நமது கலாட்டா சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..