தமிழ் சினிமா ரசிகர்களிடம் பரிச்சயமான நடிகராக பல ஆண்டுகளாக பயணித்து வருபவர் எம்.ஆர் வாசு விக்ரம். பழம்பெரும் நடிகர் 'நடிகவேள்' எம். ஆர் ராதா அவர்களின் பேரனும் பிரபல நடிகர் எம் ஆர் வாசு அவர்களின் மகனுமானவர் நடிகர் எம் ஆர் வாசு விக்ரம்.

திரையுலகில் பெரும் ஜாம்பவான் குடும்பத்தில் இருந்து வந்த எம் ஆர் வாசு விக்ரம். தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான இவர் கடந்த 1988 ல் வெளியான பாலைவன பட்டாம்பூச்சி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன்பின் தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் நீங்களும் ஹீரோதான், பரதன், மஞ்சு விரட்டு, சிவாஜி, எங்கள் ஆசான் உள்ளிட்ட 50 - க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக தன் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்து குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரானார்.

திரைப்படங்களில் நடிகராக மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்து வெகுஜன மக்களிடம் பரிச்சயமானார். தொடர்ந்து திரையுலகில் பல படங்களில் நடித்து வலம் வரும் எம் ஆர் வாசு விக்ரம் தாயார் தற்போது உடல்நல குறைவால் காலமானார்.

நேற்று மாலை 7 மணியளவில் மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான லலிதாம்பாள் (ஒவயது 83) உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். சென்னை கோடம்பாக்கம் அமைந்துள்ள வாசுவின் வீட்டில் லலிதாம்பாள் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் வரும் திங்கள் கிழமை மாலை 2 மணியாளத்தில் ஏவி.எம் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லலிதாம்பாளின் மறைவு குறித்து அறிந்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் "நடிகர் திரு. MRR வாசு அவர்களின் மனைவியும், நடிகர் வாசு விக்ரம் அவர்களின் தாயாருமான திருமதி. லலிதாம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார். இதையடுத்து இரங்கல் செய்தியுடன் முதல்வரின் அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.