நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற எஸ்.ஜே.சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது திரைப்பபயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் பின் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் தற்போது சின்ன திரையில் பிரபல நடிகராக வலம் வருபவருமான மாரிமுத்து அவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு எஸ்.ஜே.சூர்யா அவர்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது மாரிமுத்து குறித்து பேசிய நான் ஒரு விஷயத்தில் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் அந்த டயலாக்கை ஒரு முறை சொல்லுங்கள் என சொன்னதும் மாரிமுத்து "ஏம்மா ஏய்!!" என்று அந்த ட்ரெண்டிங் வசனத்தை சொன்னார்.

தொடர்ந்து பேசிய மாரிமுத்து, “இந்த வசனம் உலக அளவில் ஃபேமஸ்.. அன்று ஒரு நாள் ரயிலில் பார்த்த டி டி ஆர் ஒருவர் தனது செல்போனில் வந்த மெசேஜை பார்த்து விட்டு “ஏம்மா ஏய்!” எனப் போகிறார்." என்றார். இதனைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக ஆசை மற்றும் நேருக்கு நேர் படப்பிடிப்பில் நடந்த கலகலப்பான ஒரு சம்பவம் குறித்து பேசிய மாரிமுத்து அவர்கள் தொடர்ந்து இந்த "ஏமா ஏய்!" வசனம் குறித்து விவரித்தார். அப்படி பேசுகையில்,

அந்த "ஏம்மா ஏய்!" என்னவென்றால் எனக்காக ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய அப்பா எங்கள் ஊரில் சொல்வது தான் அது. இந்தத் தொடரில் ஒரு குடும்பத்தையே கண்ட்ரோலில் வைத்திருக்கிறேன் அல்லவா... அந்த மாதிரி எங்கள் அப்பா ஒரு ஆளுமையான கதாபாத்திரம். எங்கள் அப்பா ஒரு விவசாயி. எங்கள் ஊரில் தேனி மாவட்டத்தில் அவருடைய தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களை அப்படி தான் கூப்பிடுவார். "ஏம்மா ஏய்! இந்த பக்கம் வந்து களை எடுங்கமா... அதான் சொல்லிக்கிட்டே இருக்கேன்ல்ல அங்க போய்கிட்டு இருக்கீங்க இந்தாம்மா ஏய் உன்னைய தான்மா இங்க வா!" என்பார். இது என்னை அறியாமலேயே எனக்குள் இறங்கி விட்டது இதையே நான் தினமும் கேட்டு கேட்டு… இதை சொல்ல வேண்டும் என்று பிளான் பண்ணி எல்லாம் சொல்லவில்லை. “ஏம்மா ஏய் காபி கொடுங்கம்மா” என்று சொன்னேன் அந்த ஹரி பிரியாவை பார்த்து, அதை அப்படியே ரசிக்க ஆரம்பித்தார்கள் நானும் சொல்ல ஆரம்பித்து விட்டேன். அதேபோல அந்த ஒரு இருமல்… ஒரு டயலாக்கை சொல்லி முடித்தவுடன் செருமவேன். அது ஒரு அறிகுறிதான் நம்முடைய தமிழ்நாட்டு கிராமங்களில் நடப்பது தான். டீக்கடையில் ஒரு ஆள் உட்கார்ந்திருப்பான் எதிரே அவனுடைய சண்ட காரன் இருப்பான் அவனுடைய கவனத்தை இழுப்பதற்காக செருமுவார்கள் இதை வைத்து வடிவேலு சார் ஒரு காமெடி சீன் கூட பண்ணியிருக்கிறார்”

என தெரிவித்துள்ளார் இன்னும் பல கலகலப்பான விஷயங்கள் கொண்ட எஸ்.ஜே.சூர்யாவின் அந்த ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.