இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த நடிகர் மாதவன் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் ராக்கெட்ரி - நம்பி விளைவு. இந்த முறை நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் களமிறங்கிய மாதவன் முதல்முறையாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அந்த வகையில் மாதவன் திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக தயாராகி வெளிவந்தது.

திரு.நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட, ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்க, அவரது மனைவி மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். மேலும் ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், மோகன் ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்த, ராக்கெட்ரி படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட தமிழ், ஹிந்தி & ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ராக்கெட்ரி திரைப்படம் கடந்த ஆண்டு (2022) ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது.

திரையரங்குகளில் ரிலீஸாவதற்கு முன்பு மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது ராக்கெட்ரி திரைப்படத்தைப் பார்த்து ரசித்த அனைவரும் மாதவன் மற்றும் படக்குழுவினரை எழுந்து நின்று பாராட்டினர். இதனை அடுத்து திரையரங்குகளிலும் ராக்கெட்ரி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ஹிந்தியில் கடைசியாக தோகா ரவுண்டு டி கார்னர் எனும் ஹிந்தி திரைப்படம் கடந்த ஆண்டு (2022) மாதவன் நடிப்பில் ரிலீசானது. மேலும் இந்த 2023 ஆம் ஆண்டு அம்ரிக்கி பண்டிட் எனும் ஹிந்தி திரைப்படம் மாதவன் நடிப்பில் வெளிவர தயாராகி வருகிறது.

இந்த வரிசையில், அடுத்ததாக மாதவன் நடிக்கும் புதிய தமிழ் படத்தின் அறிவிப்பு ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது. கடந்த 2022 ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட்டான திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் புதிய படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மென்ட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு “அதிர்ஷ்டசாலி” என பெயரிடப்பட்டுள்ளது. “அதிர்ஷ்டசாலி” திரைப்படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து ஷர்மிளா மந்த்ரே மற்றும் கீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் இந்தியாவின் இளம் நீச்சல் வீரராக அசத்தி வருகிறார். தொடர்ந்து இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்து வரும் வேதாந்த் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இதற்காகவே நடிகர் மாதவன் அவரது குடும்பத்தோடு துபாயில் குடியிருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தற்போது மேலும் சில பதக்கங்களை வென்று குவித்துள்ளார். சமீபத்தில் புவனேஸ்வரி நடைபெற்ற 48வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர் உள்ளிட்ட போட்டிகளில் தங்கப்பதக்கமும் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஆகிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும் என ஐந்து பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்தடுத்து பல பதக்கங்களை வெல்லும் வேதாந்த் கட்டாயமாக ஒலிம்பிக்கிலும் பதக்கத்தை வெல்வார் என தற்போது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தற்போது 48வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்திருக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கலாட்டா குழுமமும் இளம் நீச்சல் வீரர் வேதாந்திற்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தன் மகன் பதக்கங்களை குவித்தது குறித்து பெருமையோடு நடிகர் மாதவன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவும் புகைப்படங்களும் இதோ…

VERY grateful & humbled by the performances of @fernandes_apeksha ( 6 golds,1 silver,PB $ records)& @VedaantMadhavan (5golds &2 silver).Thank you @ansadxb & Pradeep sir for the unwavering efforts & @ChouhanShivraj & @ianuragthakur for the brilliant #KheloIndiaInMP. So proud pic.twitter.com/ZIz4XAeuwN

— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 12, 2023