வரும் மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அகிலன் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் 28 வது படமாக அமைந்த இப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் துறைமுகம் சார்ந்த பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், தீனா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு N.கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்ய விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்காளாக இருக்கும் அகிலன் திரைப்படம் வெளியாவதையொட்டி அகிலன் திரைப்படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி நமது கலாட்டா மீடியா பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஜெயம் ரவியிடம், துரோகம் உங்களுக்கு நடந்திருக்கா? என்ற கேள்விக்கு,

"துரோகம் இருக்கு. ஃப்ரெண்ட்ஷிப் ல அது இருக்கு.. எனக்கு அப்போ அப்படினா என்னனே எனக்கு தெரியாது. சின்ன வயசுல நடந்தது அது. நான் ரொம்ப நம்புன என் நண்பன் என்ன ஏமாத்திட்டான். அது தான் நான் துரோகமா பாக்றேன் இப்போ.. அப்பப்போ நடக்கும் அதெல்லாம். சினிமாவில், படம் ஓடலனா இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் அ தான் கை காட்டனும்" என்று நகைச்சுவையுடன் பகிர்ந்தார்.

மேலும் சமகால இளைஞர்களின் பைக் பயணம் குறித்து, "ஹெல்மெட் என்ன நிறைய இடங்களில் காப்பாத்திருக்கு, வேகமாலாம் ஓட்டல.. வண்டி ஓட்ட தெரியாம நிறைய நேரம் விழுந்திருக்கேன். நம்ம ஒழுங்க ஓட்டுனாலும் மத்தவங்க ஒழுங்க ஓட்டனும்ல..அதனால நான் ஹெல்மெட் மற்ற உயிர்காக்கும் கவசங்களையும் போட்டுக்கிட்டேன். நம்ம ஆபத்து நோக்கி போக கூடாது. ஆபத்து வந்தா நம்மதான் தள்ளி போகனும். சம கால இளைஞர்களின் அதிவேக பைக் பயணம் ரொம்ப தவறான விஷயம், என் முன்னாடி கார்ல வந்து வேகமா பைக்ல வந்து போட்டோ கேட்பது கூட நான் மறுத்திருக்கேன். அவங்க அன்பு புரியுது. ஆனா இது அதற்கான வழி இல்லை" என்றார்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கொண்ட வீடியோவை காண..