கடந்த ஜூலை 14ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’ பேண்டசி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படத்தினை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரங்களில் யோகி பாபு, சரிதா, மோனிஷா, திலீபன், அருவி மதன். சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான மாவீரன் திரைப்படம் கொண்டாட்டங்களுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. விமர்சன ரீதியாக ரசிகர்களின் ஆதரவை பெற்ற மாவீரன் திரைப்படம் தற்போது உலகளவில் ரூ 75 கோடி வசூல் செய்து கவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா சினிமா சிறப்பு பேட்டியில் மாவீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் திலீபன் அவர்கள் மாவீரன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதில் சிவகார்த்திகேயன் குறித்து பேசுகையில், "சிவகார்த்திகேயன் வெறும் நடிகர் மட்டுமல்ல அவரை விளம்பரப்படுத்த தேவையான எல்லா திறனும் கொண்டவர். நடிப்பு மட்டும் என்ற ஒரு கட்டத்தில் அவரை அடக்கிட முடியாது. அவர் பன்முகதிறன் கொண்டவர். அவர் இப்போ திரைத்துறையில் என்னவா இருக்கிறாரோ.. அது எப்பவோ அகிருக்க வேண்டியது.. இதுவே லேட்டு னு நினைக்கிறேன்..ஏன்னா அவர் அவ்ளோ கஷ்டப்பட்டுருக்காரு.. படப்பிடிப்புல எப்பவும் ஒரு தனி எனர்ஜியா இருப்பார். அந்த எனர்ஜி நமக்கும் வரும்.." என்றார் நடிகர் திலீபன்.

மேலும் தொடர்ந்து இரண்டாம் பாதி குறித்த விமர்சனத்திற்கு பதில் கொடுத்த நடிகர் திலீபன் பேசியது, "இரண்டாம் பாதி குறித்த புரிதல் நம்மளோட பார்வை தவறு என்று நினைக்கிறேன். இரண்டாம் பாதியில் குறை வைக்கும்படியான ஒரு இயக்குனர் அஷ்வின் இல்லை.. அவரை படப்பிடிப்பில் நிறைய பார்த்து பிரம்மித்திருக்கிறேன். பழைய க்ளைமேக்ஸ் என்று சொல்லி அவர் விட்டுட மாட்டார்.

சாதாரணமா டப்பிங்லே ஒரு வார்த்தையை பத்து முறை சரி பார்ப்பார். அப்படி இருக்க ஆள் கதை எழுதும் போதே தெரிஞ்சிருக்கும்ல.. அதனால் அவர் அந்த கதைக்கு தேவைனு அதை சேர்த்திருப்பார்.‌." என்றார் நடிகர் திலீபன்.

மேலும் நடிகர் திலீபன் அவர்கள் மாவீரன் திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..