அருள்நிதி நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘திருவின் குரல்’ படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் பாரதி ராஜா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். லைகா தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படம் குறித்து நாயகன் அருள்நிதி, நாயகி ஆத்மிகா மற்றும் இயக்குனர் ஹரிஷ் பிரபு ஆகியோர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்துகொண்டு படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் தொடர்ந்து கிரைம் திரில்லர் திரைப்படத்தில் மட்டுமே நடிக்கின்றீர்கள் என்ற விமர்சனத்திற்கு அருள்நிதி பதிலளித்தார்.

அதில் அவர் "எல்லா திரில்லர் திரைப்படங்கள் உள்ளே ஒரு கதைக்கரு வித்யாசமாதான் கொடுக்கிறேன். கதை கேட்கும் போது இந்த படம் எனக்கு திரில்லர் மாதிரியே தோனல.. இது ஒரு உணர்வு பூர்வமான கதை னு நினைச்சேன். மருத்துவமணையில் நடக்கும் காட்சிகள் அவ்ளோ உணர்வுபூர்வமா இருக்கும். இயக்குனரிடம் நிறைய பேர் மிஷ்கின் சார் படங்கள் போல் இருக்கின்றது னு சொல்லிருக்காங்க." என்று குறிப்பிட்டார். மேலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஏன் படத்தினை வெளியிடவில்லை என்ற கேள்விக்கு, "உதய் அண்ணா நிறைய இடத்தில இதை சொல்லிருக்காரு.. எல்லா படங்களையும் அவர் போய் வாங்கி ரிலீஸ் செய்றது இல்ல.. யார் வந்து கேட்குறாங்களோ அந்த படத்தை பார்த்து பிடிச்ச படத்தை ரிலீஸ் பன்றாங்க.." என்றார் நடிகர் அருள்நிதி.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமாகவும் விநியோகஸ்தராகவும் இருக்கும் நிறுவனம் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். தமிழ் சினிமாவில் குருவி திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறார். அதே நேரத்தில் விநியோகஸ்தராகவும் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக மக்களுக்கு பரிசையமானாலும் இரண்டு தசாப்தங்களாக தமிழ் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமும் விநியோகச்தருமாக உதயநிதி இருந்து வருகிறார். தொடர்ந்து தமிழில் மிக முக்கியமான படங்களை விநியோகித்து வரும் உதயநிதி கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 20க்கு மேற்பட்ட படங்களை விநியோகித்து உள்ளார். இந்த ஆண்டு வெற்றிகரமாக அஜித் குமாரின் துணிவு படமும் விஜயின் வாரிசு படங்களுடன் தொடங்கிய உதயநிதி தொடர்ந்து பல படங்களை விநியோகித்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருவின் குரல் படக்குழுவினர் படம் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..