இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆக்‌ஷன். ஹாலிவுட் தரத்தில் வியக்கவைக்கும் ஆக்‌ஷன் காட்சியோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லஷ்மி, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த மாதம் இப்படத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நவம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷால் – சுந்தர் சி கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படத்திலிருந்து நீ சிரிச்சாலும் பாடல் வீடியோ வெளியானது. சாதனா சர்கம், ஜொனிதா காந்தி மற்றும் ஸ்ரீநிஷா பாடியுள்ளனர். பா.விஜய் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.