கடந்த 1997 ல் இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடியே மிகப்பெரிய கவனம் பெற்று கொண்டாடப் பட்ட திரைப்படம் ‘காதல் தேசம்’. வினித், அப்பாஸ், தபு ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் பேசபட்டும் வருகிறது. முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து பெயர் பெற்றவர் நடிகர் அப்பாஸ். காதல் நாயகனாகவும் சாக்லேட் பாயாகவும் ரசிகர்களிடையே அறிமுகமான அப்பாஸ் தொடர்ந்து தமிழில், விஐபி, படையப்பா, பம்மல் கே சம்மந்தம், ஆனந்தம் ஆகிய படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்து முக்கிய நடிகராகவும் திரையுலகில் வளர்ந்தார் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த அப்பாஸ் காலப் போக்கில் திரைப்படங்களில் நடிப்பது குறைந்து வந்தது. அவ்வபோது விளம்பரங்களிலும் தொலைக்காட்சியிலும் நடிகர் அப்பாஸ் நடித்து வந்தார். திரையுலகில் முழு நேரமும் இல்லாவிட்டாலும் ரசிகர்களிடையே நல்ல பெயரையே பெற்று கொண்டாடப்பட்டவர் நடிகர் அப்பாஸ்.

இந்நிலையில் நடிகர் அப்பாஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தனது திரைபயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவரது வாழ்கையின் இக்கட்டான சூழ்நிலை குறித்து பேசுகையில்.

" நிறைய ரசிகர்கள் நீங்க எப்போ திரும்ப நடிப்பீங்க.. உடம்பு சரியில்லையா.. மனநல பாதிக்கப்பட்டதா என்றெல்லாம் கேட்டாங்க.. முன்னதாக என் வாழ்கைய முடிச்சிக்க நினைச்சேன். நான் 10 வது பரிச்சையில் தோல்வியடைந்தேன். என் காதலி என்னை விட்டு போனாள். என்னுடன் நெருங்கி பழகி நண்பன் விட்டு போனான். ஒரு பத்தாவது படிக்குற பையனுக்கு அதுதான் தெரிஞ்சிது.

ஒரு நாள் ஒரு லாரி முன்னாடி விழுந்து இறந்துடலாம் னு நினைச்சேன். ஒரு நெடுஞ்சாலையில தயாரா இருந்தேன். ஒரு தைரியத்தோட இருந்தேன். அப்போ ஒரு லாரி வந்தது. ஆனா அதுக்கு பின்னாடியே ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருத்தர் வந்தாரு.. நான் அப்போ நினைச்சேன். அந்த மோட்டார் சைக்கிளில் வருவருக்கு எதனா ஆயிடுச்சுனா.. லாரிக்கு எதுவும் ஆகாது. லாரி மீது மோதி அந்த இரு சக்கர வாகனத்தில் வருவருக்கு எதனா ஆயிடுச்சுனா னு யோசிச்சேன். அந்த நேரத்துல நான் யோசிச்சு.. அதை கைவிட்டேன். எதிர்பார்ப்பு இல்லாம வாழ தொடங்கினேன்.‌." என்றார் நடிகர் அப்பாஸ்

மேலும் நடிகர் அப்பாஸ் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்புமுனைகள், திரைப்படங்களின் அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ.