சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார்.

நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இந்த படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தின் டீஸரை ட்விட்டரில் பகிர்ந்த சூர்யா ரசிகர்கள், இயக்குனர் சுதா கொங்கராவின் ட்விட்டர் பக்கம் என நினைத்து தவறான நபர்களை டாக் செய்து வந்தனர். இதை தெளிவு படுத்தும் வகையில் 2D நிறுவனம் பதிவு செய்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா ட்விட்டரில் இல்லை, போலியான அக்கௌன்ட்டுகளை கண்டு யாரும் நம்ப வேண்டாம் என்று ரசிகர்களுக்கு எடுத்துரைத்தது.