தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் 2021 பொங்கலை முன்னிட்டு வெளியானது.

கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றி படமாக மாறியது மாஸ்டர்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் Beast படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66 படத்தினை வம்சி இயக்குகிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றனர்.

விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிவிட்டன இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் விஜய் குறித்த ஒரு உருக்கமான பதிவுடன் விஜயின் வெளியிடப்படாத புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

29 years of a remarkable journey yet the kind of dedication and professionalism you display is truly inspiring. Every moment I spend with you is a learning process. Wishing you lot more success and happiness in the years to come @actorvijay na 🤗♥️#29YrsOfVIJAYSupremacy pic.twitter.com/f6hMWNxoZS

— Jagadish (@Jagadishbliss) December 4, 2021