“கே.ஜி.எப்” சினிமா பாணியில் கொரனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களை, சீனா அரசாங்கம் கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லப்படும் அவல நிலை காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளன.

சீனாவில் உருவாகி, சீனப்பெரும் சுவரையும் தாண்டி, இன்று உலகம் முழுக்க கிட்டத்தட்ட 28 நாடுகளில் பரவி வருகிறது கொரனா வைரஸ்.

கொரனா வைரஸ்க்கு சீனாவில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட ஆயிரத்து 770 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 71 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆயிரம் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Chinese Govt. Treat Chinese people like slaves!
Can you believe this is 2020!?! #Coronavirius#china#WuhanCoronavirus pic.twitter.com/7t2QXMkq1q

— نمبردار جی (@Theakay47) February 17, 2020

இதனிடையே, கொரனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்ற மருந்துகளை விட, சீனாவில் பழமையான பாரம்பரிய வைத்தியம் முறைகள் கை கொடுப்பதாகவும், இதனால் நிறையப் பேர் குணமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், நோய் பாதிப்பு இருப்பவர்கள் அனைவரும், கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் சீனா அரசு ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, கொரனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களை, வரிசையாக அவர்களது இடுப்பு பகுதியில் கயிற்றைக் கட்டி, அவர்களை ஒரு குறிப்பிட்ட அடி நீள இடைவெளி விட்டு, வரிசையாக வாகனத்தில் ஏற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களும், கொரனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு, விலங்குகள் போல், சினிமா படங்களில் வரும் அடிமைகள் போல் செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களைக் கண்ணீர் வரவழைக்கின்றன.

அதேபோல், சீனா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையாகக் கொசு மருந்து போல், புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. சாலைகள் முழுவதும் நோய் தடுப்பு பவுடர்கள் தூவப்பட்டு வருகின்றன. அத்துடன், சாலையில் செல்பவர்களுக்குப் பாதுகாப்பு கவசங்களும் கொடுக்கப்பட்டு, அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.