மகள் வேறு சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்ததால், தாய் எரித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் - உமா மகேஸ்வரி தம்பதிக்கு 17 வயதில், ஒரு மகள் இருந்துள்ளார்.

அந்த இளம் பெண், அங்குள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துள்ளார்.

இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால், அந்த பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுள்ளனர். இதனால், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போக முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த வாரம் அவர்கள் வீட்டை விட்டு ஓட முயன்றபோது, அந்த பெண்ணின் பெற்றோர், எப்படியே அதைக் கண்டுபிடித்து பெண்ணை மீட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, மகளுக்குத் தாய் அறிவுரை கூறியுள்ளார். அப்போது, அவர் தாயை எதிர்த்துப் பேசியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த தாய் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை மகள் மீதும், தன் மீதும் ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்துள்ளார். இதில், இரண்டு பேரும் எரிந்து அலறித்துடிக்கவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த அந்த பெண், தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.