திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத் மலக்பேட் பகுதியைச் சேர்ந்த 24 வயதான சந்தீப், ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், திருமணத்திற்கு முதள் நாள் இரவு வரை உறவினர்களிடம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த மாப்பிள்ளை சந்தீப், அதிகாலை 3 மணிக்குத் தூங்கச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, காலையில் அவரது ரூம் கதவை அவரது உறவினர்கள் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இரவு தூங்க நேரமானால், ஆழ்ந்து தூங்குவதாக நினைத்த உறவினர்கள், சிறு நேரம் கழித்து மீண்டும் வந்து கதவைத் தட்டி உள்ளனர். அப்போதும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, சந்தீப் ரூமில் உள்ள பேனில் தூக்கில் சடலமாகத் தொங்கி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாப்பிள்ளை தூக்கில் தொங்கியது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சந்தீப்பின் தாயார் சிறுவயதிலேயே இறந்த நிலையில், அவர் தாத்தா வீட்டிலேயே வளர்ந்துள்ளார். அப்பா, பிசினஸ்மேன் என்பதால், அவர் வேலையில் எந்நேரமும் பிஸியாகவே இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாத்தா உயிரிழந்த நிலையில், சந்தீப் மன உலைச்சலில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், மறுபடியும் அவர் மன உலைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.